தொகுதி மறுசீரமைப்பு : பிற மாநிலங்களின் ஆதரவை நாடும் திமுக

Constituency Restructuring

தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து விவாதிக்க  (மார்ச்05) தமிழ் நாட்டில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தற்போது பிற மாநிலத்தின் ஆதரவையும் பெற முடிவு செய்து, அதற்கான குழுவையும் திமுக தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு முன் தொகுதி மறுசீரமைப்பு எப்போ நடைபெற்றது

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82 மற்றும் 170 தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது, அதாவது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஏனென்றால் அப்பொழுது தான் தொகுதிகளின் எண்ணிக்கை,தொகுதிகளின்  எல்லை மற்றும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினருக்கான தொகுதி எவை என அனைத்தும் நிர்ணயிக்க முடியும்.

இந்தியா சுதந்திர பெற்ற பிறகு 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 494 (36 கோடி ம.தொ), அதன் பிறகு 1961ஆம் ஆண்டு 522 ஆக மாற்றப்பட்டது, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 1971 ஆம் ஆண்டு 543 (54.8 கோடி ம.தொ)தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.தற்போது வரை இந்த நிலையே நீடிக்கிறது.

42 வது சட்டத்திருத்தின் படி 2001 ஆம் ஆண்டு வரை 543 தொகுதிகள் என்ற நிலையே  நீடிக்கும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுசீரமைப்பை நடத்திக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டது.அதன் பிறகும் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 82 வது சட்டத்திருத்தின் படி 2026 ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது நாடளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும். ஆகையால், 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகக் குறைக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.இது அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது,ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து பேசுகையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது என்று கூறினார். ஆனால் வட இந்தியாவில் தொகுதிகள் அதிகரிப்பதை பற்றி எதுவும் கூறவில்லை மேலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று திமுக எம்.பி ஆர்.ராசா கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு  அழைப்பு விடுத்தார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க  அதிமுக,பாஜக,தவெக,நாதக மற்றும் இயக்கங்கள் உட்பட 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக, நாதக இக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தை தொடர்ந்து புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி ஆகியவையும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். அதிமுக,தவெக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனையை வழங்கியது.

  • இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான ‘நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை’ இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
  • கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பேய் உறுதி அளித்தார். தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல – மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஒன்றை அமைத்திட வேண்டும்.

பிற மாநில ஆதரவை நாடும் திமுக

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானத்தின் படி பிற மாநில முதலமைச்சர் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ் நாடு, தென் மாநிலங்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை 

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு எதிராக ஏற்கனவே திமுக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒரு உத்வேகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக,அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ஏழு மாநிலங்களுக்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

  • கனிமொழி, தங்கம் தென்னரசு –  மேற்கு வங்கம்
  • என்.ஆர். இளங்கோ, கே.என். நேரு –  தெலுங்கானா
  • பி.வில்சன், எ.வ.வேலு –  ஆந்திரா
  • டி.ஆர்.அப்துல்லா,பொன்முடி –  கர்நாடக
  • தமிழச்சி தங்கப்பாண்டியன், பி.டி.ஆர் –  கேரளா
  • கனிமொழி சோமு, ரகுபதி –  பஞ்சாப்
  • தாயநிதி மாறன்,  டி.ஆர்.பி. ராஜா –  ஒடிசா

இந்த ஏழு மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் ஆதரவு கட்சியின் தலைவர்களை சந்தித்து, தொகுதி மறுசீரமைப்பை குறித்து விளக்கி பேசி ஆதரவு கோரவுள்ளனர்.