இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டியதாக கல்லூரி மாணவர் கைது

"College student arrested after allegedly threatening a woman he connected with on Instagram"


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 29 வயது பெண் தனது 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் சென்னையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம், அந்த பெண் இன்ஸ்டாகிராம் வழியாக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மாயவன் மகன் கலையரசன் (20) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களுக்கிடையில் நட்பு ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியும், புகைப்படங்கள் எடுத்தும் வந்துள்ளனர். இதனை அவரது கணவர் அறிந்து, மனைவியை கண்டித்ததாக கூறப்படுகின்றது

பின்னர், அந்த பெண் கலையரசனுடன் தொடர்பை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசன், “பேசவில்லை என்றாலும், சந்திக்கவில்லை என்றாலும் நாம் சேர்ந்து இருப்பது போல எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன்” என மிரட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்

அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, தற்போது மெக்கானிக்கல் டிப்ளமோ 3ஆம் ஆண்டு படித்து வரும் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.