
கோவை சீரநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி தனது காதலனுடன் இருந்தபோது, மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய ஏழு பேர் கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இந்த ஏழு பேருக்கும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி பகவதியம்மாள், வழக்கை விசாரித்த பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடும் தீர்ப்பை வழங்கினார்.