கோவில் நில உரிமை கோரி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்

"Violent clash over temple land ownership between two communities; 4 people severely injured."

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் கோவில் முன்புள்ள நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக உரிமை பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இருபுறமும் உரிமை கோரி வாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதல் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.