
திருநெல்வேலியில் நடைபெற்ற முதலமைச்சர் படைப்பக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு எம்ஜிஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே மகளிரின் பெரும் செல்வாக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்
திருநெல்வேலியில் நடைபெற்ற முதலமைச்சர் படைப்பக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “எம்ஜிஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் மகளிர் ஆதரவு அதிகம் உள்ளது. யார் எப்படிப் பெயரிட்டாலும், மு.க.ஸ்டாலினே தமிழகத்தின் முதலமைச்சர்” என்று தெரிவித்தார்.