அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

"Image showing actress Meera Mithun, against whom a Chennai court has issued an arrest warrant in a defamation case."


நடிகை மீரா மிதுன், கடந்த 2021ஆம் ஆண்டு, பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவால் விசாரணை செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், “மீரா மிதுனை பிடித்து, வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என மத்திய குற்றப்பிரிவுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து, மீரா மிதுனை டெல்லியில் கைது செய்துள்ளனர் என்றும் தற்போது, அவரை அங்குள்ள அரசு காப்பகத்தில் வைத்திருப்பதாகவும் தகவலொன்று பரவியுள்ளமையும் குறிப்பிடதக்கது