காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை 

The Greater Chennai Corporation has issued a stern warning to owners of vacant land regarding maintenance and misuse.


சென்னை மாநகராட்சி நிர்வாகம், நகர சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

 மாநகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் உள்ள காலி மனைகளில் செடிகள், குப்பைகள், மற்றும் மழைநீர் தேங்கி பொதுசுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தாதவாறு உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிலங்களுக்கு சுற்றுச்சுவர் அல்லது பாதுகாப்பான வேலி கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலி நிலங்களில் திடக்கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதையும், அவற்றை எரிப்பதையும் தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத நில உரிமையாளர்களுக்கு தொடக்கத்தில் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அதற்குப் பிறகும் விதிமீறல்கள் தொடருமானால், தினசரி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இத்தகவல் வெளியானதுடன், நகர மக்களும் பொதுவாகவே சுகாதார நலனில் அக்கறை காட்டி, நகர தூய்மையில் ஒத்துழைக்க மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.