மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

"Two drug addicts arrested for stabbing cattle brokers near Kulithalai."


திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து நிழற்குடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவர் மீது, போதை நிலையில் வந்த இரு இளைஞர்கள் திடீரென கத்தியுடன் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மாடு தரகர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியில் சுற்றித்திருந்த சந்தேகத்துக்குரிய இரு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகியிருந்ததும், மதுபோதையில் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.