
பஞ்சாப்:- காஷ்மீரில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அடுத்த நாளான ஏப்ரல் 23 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா தவறுதலாக நுழைந்துள்ளார். பஞ்சாபில் பணியில் இருந்த போதுதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
வழக்கமாக எல்லையை கடக்கும் போது இருநாட்டினரும் அந்தந்த நாட்டிலேயே ஒப்படைக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த முறை எல்லையில் போர் சூழலுக்கான பதற்றம் நிலவியதால் பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தான் இராணுவத்திடமே இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் இவரும் இந்நாள் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளார்.
இது தொடர்பாக பதான்கோட்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் அவருடைய மனைவி ரஜினி தன்னுடைய கணவரை மீட்பதற்காக பஞ்சாபில் பெரோஸ்பூர் எல்லைக்கே சென்றுள்ளார். ரஜினி கர்ப்பிணியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மே 14ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட BSF வீரர் பூர்ணம் குமார் ஷா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் படைவீரரை போல் அல்லாமல் ஒரு உளவாளியை போல் நடத்தப்பட்டதாகவும் உணவு சரியாக அளித்திருந்தாலும் பல் விலக்கவும், குளிக்கவும், கழிவறை செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 வாரங்களில் 3 வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் எப்போதுமே கண்களும் கை கால்களும் கட்டப்பட்டே இருந்ததாகவும் சாப்பிடும் வேளையில் மட்டுமே அவிழ்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் AIR SPACE இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் விமானம் செல்லும் சத்தம் மட்டுமே கேட்டதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாக எந்த துனபத்தையும் கொடுக்கவில்லை என்னை அடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை ஆனால் மன ரீதியான அனைத்து துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுவிட்டேன் என்று தன் வேதனையை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மீண்டும் பணியினை தொடர்வதாகவும் அதனையே குடும்பம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.