பட்டுக்கோட்டையில் கொடூரம் : பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொலை!

பட்டுக்கோட்டையில் கொடூரம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக மகளிர் அணி முன்னாள் நிர்வாகி சரண்யா கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் சரண்யாவின் தலையை துண்டித்து, கொலை காரர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாகியுள்ளது 

மதுரை மாநகர பாஜக மகளிர் அணியில் மாவட்ட செயலாளராக இருந்த சரண்யா, தனது இரண்டாவது கணவரான பாலனுடன் சேர்ந்து, பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார். 

இவர்கள் இருவரும் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் கடையை மூடிய பின்னர், சரண்யா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மீன் மார்க்கெட் சந்து பகுதியில் மர்ம நபர்களார் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

மேலும் அவரது கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை அடையாளம் தெரியாத நபர்களால் எடுத்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

படுகாயங்களுடன் கூடிய அவரது உடல் மட்டுமே சம்பவ இடத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக வாட்டாத்திகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர் 

இந்த கொலையின் பின்னணியில் சொத்து தகராறு மற்றும் குடும்ப மனவருத்தங்கள்  இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து வந்திருந்தனர் 

இந்நிலையில் சரண்யாவை கொலை செய்ததாக கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பாலனின் பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து எழுதி தரச் சொல்லி முதல் மனைவி கேட்டு வந்ததாகவும், ஆனால் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க சொல்லி இரண்டாவது மனைவி சரண்யா அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சரண்யாவின் இரண்டாவது கணவர் பாலனுக்கு முதல் திருமணத்தில் மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். பாலன் அவர்களை விட்டு விலகி சரண்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் 

இதனால் சொத்து உரிமை தொடர்பான மோதல்கள் ஏற்பட்டதாகவும், சரண்யா சொத்துகளை தன் பெயரில் எழுதத் தன் கணவரை அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பாலனின் முதல் மனைவியின் மகனான கபிலனுக்கு, தந்தை தன்னை விட்டு பிரிந்து செல்ல சரண்யா தான் காரணம் என்ற கோபம் மேலோங்கி இருந்ததாகவும், சொத்து பகிர்வில் ஏற்பட்ட பிணக்கும் அவரை கொலைக்கு தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.