
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திராகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மூத்த மகன் தவசி, இளைய மகன் பாஸ்கர் இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து, முன்பு கசாப்புக் கடை நடத்தி வந்தனர். கடையின் வருமானத்தை தவசி தேவையற்ற செலவுகள் மற்றும் மதுவிற்கு பயன்படுத்தி வந்ததால், தம்பி பாஸ்கர் அடிக்கடி அவரிடம் வாக்குவாதம் செய்து வந்தார்.
ஜூலை 16ஆம் தேதி, அண்ணன் தவசி தம்பி பாஸ்கரின் காதலியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தம்பி பாஸ்கர் தந்தை மாரிமுத்து அண்ணனை அழைத்து கண்டிக்க சொல்லியுள்ளார்.
இதையடுத்து அண்ணன் தம்பி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அதன் போது, “உன்னை போட்டு தள்ளிட்டா பிரச்சனை தீரும்” என தவசி கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விடயம் குடும்பத்தினர் யாராலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அன்றைய நாள் இரவு, மதுபோதையில் தம்பி பாஸ்கர் தூங்கிக் கொண்டிருந்தபோது, தவசி கோபத்தில் அவனை கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார்.
தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தவசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.