
சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார். இவர் பா.ஜ.க மாநில நிர்வாகி மருதுபாண்டியின் சகோதரராக இருந்தவர். கடந்த சில மாதங்களாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த விஜயகுமார், கடந்த இரவு தனது வீட்டில் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில், மது அருந்தும் போதே ஏற்பட்ட தகராறில் ஒருவர் விஜயகுமரை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பலமுறை வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை சம்பந்தமான காரணங்கள் மற்றும் தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தினரின் தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.