மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு

"Tragic death of siblings who fell into a stone quarry pit in Madurai."

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குவாரி அருகே விளையாடிகொண்டிருந்த 4 சிறுவர்களில் 3 வயதான ஆஷிக் ராஜா என்ற குழந்தை நீரில் மூழ்குவதை கண்டு அவரது சகோதரியான 9 வயது சையது அலி சஹானா மற்றும் மேலும் இருவரும் ஆஷிக் ராஜாவை காப்பாற்றுவதற்காக நீருக்குள் இறங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட ஆஷிக் ராஜாவின் தாய் உடனே நீருக்குள் பாய்ந்து இருவரை மட்டுமே உயிருடன் கரையிறக்க முடிந்தது. ஆஷிக் ராஜாவும் சஹானாவும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.