பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

Village administrative officer caught red-handed taking a bribe for patta name transfer.


திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தருமாறு ரமேஷிடம் விண்ணப்பித்தார்.

இதற்காக ரமேஷ், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு வலையிட்டனர்.

ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ கார்த்திகேயன் ரமேஷிடம் கொடுத்ததும், மறைந்து இருந்த அதிகாரிகள் ரமேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.