
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் . இதில், ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றார்.
இந்நிலையில், களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் மற்றும் மூன்று சிறுவர்கள், அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்தனர். பின்னர், வங்கியின் பின்புறமாக உள்ள தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று, மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களும் அந்த மாணவியை விட சிறியவர்களென்றும் 8ம் , 9ம் வகுப்புகளில் படிப்பவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி கொடுத்ம புகாரின் பேரில், மாநகர காவல்துறையினர் அந்த சிறுவர்களையும், சம்பந்தப்பட்ட 22 வயதுடைய இளைஞரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களில் ஒரு மாணவன் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசாரணையின் போது, அந்த 22 வயது வாலிபருக்கு குற்றத்தில் நேரடி தொடர்பு இல்லை என்று மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் சிறுவயதினர் என்பதால், அவர்களிடம் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.