காரில் ஹவாலா பணம் மாற்ற முயற்சி: ரூ.3.75 கோடி பறிமுதல் – 5 பேர் கைது!

₹3.75 crore hawala money seized from a car; five suspects arrested during illegal cash transfer operation.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் காரில் ஹவாலா பணத்தை இரகசியமாக மாற்ற முயன்ற கும்பலை போலீசார் பிடித்தனர். சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்ட போது ரூ.3 கோடி 75 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து 5 பேரை கைது செய்து, அவர்கள் மூலம் கைமாற்றம் செய்ய திட்டமிட்ட பணத்தின் ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் ஹவாலா பணம் தொடர்பான இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.