பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சி – அரசின் செயலுக்கு தமிழர் விடுதலைக் களம்கடும் எதிர்ப்பு!

Tamil Liberation Front strongly opposes government's attempt to arrest Poovai Jagan Moorthy.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி அவர்களை  காவல்துறை அத்து மீறி  கைது செய்ய   முயற்சித்ததற்கு தமிழர் விடுதலைக் களம்  கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 15-ஆம் தேதி   திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற நபர்  தேனியை சேர்ந்த விஜயா என்ற பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து பெண் வீட்டாருக்கு ஆதரவாக,  தனுஷை கடத்த முயற்சித்ததாகவும், அவர் வீட்டில் இல்லாததால் அவருடைய 16 வயதான சகோதரர் இந்திரசந்தை கடத்தியதாகவும் வனராஜா, மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை திருவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இந்த கடத்தலில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

இதனால்  பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்காக கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றனர். 

ஆனால், அவர் வீட்டில் இல்லாத நிலையில் போலீசார் அத்துமீறி அவரை கைது செய்ய வந்ததாக கூறி ஜெகன் மூர்த்தியின் வீட்டின் வாயிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் குவிந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழர் விடுதலைக் களம் இந்த சம்பவத்தையும்  தமிழக அரசையும் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டியலின மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைக்க மாநில அரசு திட்டமிட்டபடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலனுக்காக ஜனநாயகப் பாதையில் நேர்மையாக போராடும் பூவை ஜெகன் மூர்த்தி அவரை, சமூகத்தில் களங்கப்படுத்தும் முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அவருக்கு விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பியிருந்தால், அவர் உரிய முறையில் ஒத்துழைத்திருப்பார் என்றும், ஆனால் சட்டத்தை மீறி வீடுகளுக்குள் நுழைவது முற்றிலும் தவறான நடவடிக்கை என்றும், இது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் முயற்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலம்  மக்களுக்காக நேரில் நின்று குரல் கொடுக்கும் தலைவர்களை குறிவைத்து இவ்வாறு செயல்படுவது  ஏற்க முடியாதது. எனவே தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை மாறவில்லை என்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது