காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!

"Arrest warrant issued against a police inspector, raising serious questions about law enforcement accountability."

மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, விசாரணை நடைபெறும் மயிலாடுதுறை நீதிமன்றம் சிங்காரவேலுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் கைது செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், பொய் வழக்கு போட்டு, லாக்-அப்பில் இரு இளைஞர்களின் கைகளை உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து போலீசாரிடமிருந்து பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.