
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்
இந்நிலையில், வடசேரி நோக்கி வேகமாக வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராத வகையில் அந்த ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில், பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், ஆம்புலன்ஸில் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் மேலும் உயிரிழப்புகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.