
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தனது வேட்பாளர்களை முன்னதாகவே அறிவித்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக போட்டியிட உள்ளனர். இந்நிலையில், இந்த இருவரும் இன்று எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கூடுதல் செயலாளரிடம் தங்களது வேட்புமனுக்களை முறையாக தாக்கல் செய்தனர்.