நிலத் தகராறில் மருத்துவமனைக்குள்ளே அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் அடிதடி

"AIADMK and DMDK members involved in a physical altercation inside a hospital due to a land dispute."


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நிலத் தகராறை மையமாக கொண்டு அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரே சர்வே எண்ணில் அதிமுக நிர்வாகி சக்திக்கும், தேமுதிக நிர்வாகி சிவக்குமாருக்கும் சொந்தமான இடங்கள் அருகருகே உள்ளதாக கூறப்படுகிறது.

சிவக்குமார் தனது இடத்தில் தேமுதிக ஒன்றிய அலுவலகத்தைத் தொடங்கியதை எதிர்த்து, சக்தி தனது ஆதரவாளர்களுடன் சென்று அந்த அலுவலகத்தை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு கும்பல் உருட்டுக்கட்டையும், இரும்புக் குழாயும் ஏந்தி மருத்துவமனைக்குள் புகுந்தது. அப்போது சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்களை அக்கும்பல் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது