போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

News headline about actor Krishna being arrested in a drug case, following the arrest of Sreekanth.

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’ திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், ரகசிய குறியீடு (secret code) பயன்படுத்தி தனது நண்பரான கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை போலீசார் உறுதிப்படுத்தியதுடன், வங்கி பரிவர்த்தனை பதிவுகள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மொபைல் சாதனங்களில் உள்ள தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், கிருஷ்ணாவும், சப்ளையராக இருந்த கெவினும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளை தனியாக மட்டுமின்றி, நண்பர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் பழக்கம் கிருஷ்ணாவுக்கு இருந்ததாகவும், இதற்காக WhatsApp குழு ஒன்று பயன்படுத்தப்பட்டதாகவும், போலீசார் விசாரணையில் தகவல்கள் வெளியாயின.

அத்துடன், திரையுலகத்தில் உள்ள மற்ற சிலரும், நடிகர் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் இருவரும் இந்த வட்டத்தில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் தற்போது விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் விஷயத்தில் திரையுலக தொடர்பு மீண்டும் ஒரு முறை உச்சநிலையில் விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளது.