திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!

"Shocking case of a woman plotting to kill her husband due to an affair that went against the sanctity of marriage."

43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு (35) அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.

ஒரு நாள் ரசூல் எதிர்பாராத விதமாக லோகேஸ்வரனின் கடைக்கு சென்றபோது, மனைவி அவனுடன் வீடியோ கால் பேசுவது கண்ணில் பட்டது. அதில் இருந்து ஏற்பட்ட தகராறு நாளடைவில் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மனைவி மற்றும் லோகேஸ்வரனை ரசூல் கண்டித்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 5 ஆம் தேதி ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. சந்தேகத்தில் அவரது மனைவி அம்முபீவின் மீது சந்தேகம் எழும்பியுள்ளது.

அம்முபீ மற்றும் லோகேஸ்வரன் தொடர்பான ஆடியோ, புகைப்படங்கள் குடும்பத்தினர் கைக்கு வந்ததுடன் அதில், உணவில் விஷம் கலந்து கொடுக்கும் திட்டத்தை அம்முபீ, லோகேஸ்வரனுடன் உரையாடலும் தெரிய வந்ததுள்ளது.

போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, மனைவி மற்றும் லோகேஸ்வரனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கணவரை வீட்டிலேயே சாப்பாட்டில் விஷம் கலந்து கொள்ள முயன்றது வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவமனையில் பல நாட்கள் உயிருக்கு போராடிய ரசூல், கடந்த 18 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.