அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை : அதிமுக கடும் பதிலடி

அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அந்தக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் அதிமுகவை நேரடியாக விமர்சிக்கும் வகையிலிருந்தது.

அதில், அதிமுக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்ததாகவும்  தொடர்ந்து, பல தேர்தல்களில் தோல்வியடைந்த மற்றும் தற்போதைய அரசியலில் செல்வாக்கு இல்லாத அதிமுகவுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் கருத்துகள் அதிமுக வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஆதவ் அர்ஜுனாவை “திடீர் அரசியல்வாதி” எனக் குறிப்பிட்டு, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு @AIADMKOfficial பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை.


இன்று த.வெ.க.- வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை! “ என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.