குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்..

குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்..

பத்மபூஷன் விருது பெருவதற்காக அஜித் நடிகர் குமார் டெல்லிக்கு சென்றுள்ளார்   

இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியரசு விருதான பத்ம பூஷன் விருதை பிரபல தமிழ் நடிகரும், சமூக சேவகருமான அஜித் குமார் குடியரசு மாளிகையில் பெறவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அறிவிக்கும் பத்ம விருதுகள் பட்டியல், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த , நடிகர் அஜித் குமார் , நடிகை ஷோபனா மற்றும் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கபடதால் மொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு இந்த ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்கும் விழாவில் நடிகர் அஜித் குமாரும் விருதை பெறவுள்ளார்.

இதற்காக நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர் 

 சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.