கிருஷ்ணகிரியில் 4 கார்கள், 2 லாரிகள் மோதி விபத்து!

"Major road accident in Krishnagiri involving 4 cars and 2 lorries."


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வாகனங்களை மாற்று வழிகளில் அனுப்பி வைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சூளகிரி அருகே சானமாவு வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த நான்கு கார்கள் மற்றும் இரண்டு லாரிகள் ஒன்று மேல் ஒன்று மோதிக்கொண்டதால் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உள்ள அனைத்து பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக ஓசூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் தொடர்ச்சியாக நின்று செல்ல முடியாத நிலை உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.