
சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்க ஒப்பந்தம் செய்தும், அதற்கான பணத்தை வழங்காமல், ரமேஷை கடத்திச் சென்று பத்திரத்தில் கையெழுத்திட மிரட்டியதாக அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் மணலி போலீசார் ஆறுமுகம் மற்றும் தொடர்புடைய நால்வர் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.