
கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர், தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பி வந்தார்.
இந்தக் குழு பயணம் செய்த ரயில், ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்த வேளையில் துளசிமணி ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தபோது, ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு இளைஞர் திடீரென அவர்கள் பெட்டியின் அருகே வந்துள்ளார்
அவர் துளசிமணியின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து, ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
துளசிமணி உடனடியாக ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.