எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண்ணொருவர் கைது

"Woman arrested for ₹31.88 lakh MBBS seat scam."


மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெரும் அளவில் மோசடி நடந்தது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரி, தனது மகளுக்காக எம்பிபிஎஸ் சீட் பெற முயற்சி செய்து வந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு சுகாதாரத்துறையில் செல்வாக்கு உண்டு, அதிகாரிகளை பலரை தெரியும் ஸ என்று கூறி அந்தோணிதாஸ் மற்றும் ரம்யா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்

மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் ரூ.60 லட்சம் பெற்றனர். பின்னர், ரோஸ்மேரியை சென்னைக்கு அழைத்து, போலி அட்மிஷன் ஆர்டரை காட்டி சீட் கிடைத்துவிட்டதாக நம்பச்செய்தனர்.

தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்த ரோஸ்மேரி பணத்தைத் திருப்பிக் கேட்டார். பல தவணைகளாக ரூ.29 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய ரூ.31.88 லட்சம் வழங்கப்படவில்லை. இதையடுத்து 2024 ஆகஸ்டில், ரோஸ்மேரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், முக்கிய குற்றவாளி ரம்யா ஓராண்டு தலைமறைவாக இருந்தார். அவர் சோழிங்கநல்லூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரம்யா ஏற்கனவே பலரிடம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததும் விசாரணையில் வெளிச்சம் பார்த்துள்ளது.