அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை தடுத்து நிறுத்திய பெண் விஏஓ மீது தாக்குதல்

"Female VAO assaulted while preventing illegal sand mining activities."


நாமக்கல் மாவட்டம் பாலமேடு பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியதாக சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ சிவகாமி தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற சிவகாமியை தேடி வந்த சீனிவாசன், அவரை வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த விஏஓ சிவகாமி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்திற்கு எதிராக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் நலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஏஓ சிவகாமி மீது தாக்குதல் நடத்திய சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.