
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டிற்கு நடிகர் விஜய் வருகை தருகிறார். இதையொட்டி விருதுநகர் மாவட்டம் இனாம் கரிசல் குளம் பகுதியில் வரவேற்பு பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்பகுதியில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த காளீஸ்வரன் என்ற மாணவர், பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகிலிருந்த மின் கம்பியைத் தொட, மின்சாரம் தாக்கியது. கடுமையாக காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கந்தாமானிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் மாணவரின் உயிரிழப்பு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.