மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி உணவகத்தில் இருந்து தப்பி ஓட்டம் – 2 ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட்!

"Prisoner escapes from restaurant while in police custody during court appearance in Madurai; two armed police officers suspended."


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பகவதி ராஜா என்ற கைதி, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை விசாரணைக்காக போலீசார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றுள்ளனர். வழக்கு முடிந்த பிறகு, மதுரையில் உள்ள உணவகத்தில் கைதி பகவதி ராஜாவுக்கு உணவு வாங்கி தர போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது போலீசாரின் கவனக் குறைவை பயன்படுத்திக் கொண்டு பகவதி ராஜா தப்பி ஓடியுள்ளார். இதனால் போலீசார் மற்றும் சிறை நிர்வாகத்துக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதியை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள் சரவணகுமார், பாலமுருகன் ஆகியோர் பணியில் அஜாக்கிரதையுடன் நடந்ததாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தப்பியோடிய கைதியை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.