242 பேருடன் உடைந்து நொறுங்கிய விமானம்

Image depicting a devastating plane crash involving 242 passengers, with the aircraft breaking apart mid-air.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று பிற்பகல் பயங்கரமான விமான விபத்து இடம்பெற்றுள்ளது.

 லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில வினாடிகளுக்குள் திடீரென மேகனி நகரில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரைப்பகுதிக்கு அருகிலேயே  வெடித்ததில், அருகிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்குத் காரணமாக விமானம் டேக் ஆஃப் ஆகும் போதே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விமானம் விழுந்ததும் சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை மேல் எழுந்ததை தொடர்ந்து விமான நிலையத்துக்கும் அதன் சுற்றுவட்டாரத்திற்கும் அச்சநிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் ஏழு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

அந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீட்பு குழுக்கள் தீயில் சிக்கிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

சம்பவ இடத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டு கொண்டிருப்பதுடன் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.