
லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின் கீழ் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை, தீபக் வர்மா எனும் நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி காணாமல்போனதும், அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு தேடத் தொடங்கினர். பின்னர் ஒரு வழிப்போக்கர், கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், பலத்த காயங்களுடன் சிறுமியை கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் அளித்தார். மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மேலும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு தீவிர விசாரணையைத் தொடங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளி தீபக் வர்மாவை அடையாளம் கண்டு. ஐந்து தனிப்படை குழுக்கள் அமைத்து தீவிர தேடலுக்குப் பிறகு, தீபக் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
பின்னர் அங்கு சென்ற போலீசாரிடம் தீபக் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் தற்காப்பிற்காக துப்பாக்கி பிரயோகம் செய்ததில், தீபக் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டும், வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்