முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த கமல்ஹாசன்!

Kamal Haasan submitting his election nomination papers in front of the Chief Minister.

பாராளுமன்ற மேல்சபையில் தற்போது எம்.பி.க்களாக உள்ள வில்சன், சண்முகம், அப்துல்லா (தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது.

தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா என அறியப்படும் ரொக்கையா மாலிக் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. ஒரு மேல்சபை இடத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ள அவர்,முதலமைச்சர் முன்னிலையில்  வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்