
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் மரியாஜோய் (67) தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் இளைய மகன் சந்தோஷ் குமாருக்கு சைனிமோள் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது .இந்நிலையில் மாமியார் மற்றும் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை உச்சக்கட்டத்தை எட்டிய தருணத்தில், சைனிமோள் அடுப்பில் இருந்த சூடு தண்ணீரை எடுத்து மாமியார் மாரியாஜோய் மீது ஊற்றியுள்ளார்
மாரியாஜோயின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் விரைந்து ஓடி வந்து அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மரியாஜோய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து மருமகளான சைனிமோளின் மீது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது