RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 உயிரிழப்பு குறித்து பிரேமலதா இரங்கல்

"Premalatha expresses sorrow over 11 lives lost during RCB celebration"

 18 ஆண்டுகளுக்குப் பிறகு  RCB அணியினருக்கு கிடைத்த வெற்றி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மாபெரும் வெற்றியை பெற்ற RCB-வின் வெற்றிக்கொண்டாட்டங்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

ஆனால் இந்த வெற்றியை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி, நாடு முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சோகமான நிகழ்வைத் தொடர்ந்து, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, அந்த மகிழ்ச்சியின் நிறைவு நீடிக்காத வகையில் ஏற்பட்ட துயரமான சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.