
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, மாவட்ட செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி ஆளுங்கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளார்
அவர் nவளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஸ்டாலின் மாடல் திமுக அரசு ஏழை மக்களை துன்புறுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறியிருக்கிறது. அதை எதிர்த்து காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகு, மேடை அமைத்த பிற்பாடு இடத்தை காவல்துறை மாற்றச் சொல்ல, அதற்கும் ஒப்புக்கொண்டு இடத்தை மாற்றி அதிமுக நடத்திய மக்களுக்கான ஒரு போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்?
“எதிர்க்கட்சிகளின் உரிமையை ஒடுக்கும் திமுக அரசு, பாசிச மாடலாகவே உருவெடுத்துள்ளது. வெறும் விளம்பர அரசியலும், எதிர்குரல்களை அடக்க முயற்சியும், மக்களிடம் மாயமான பிம்பம் ஏற்படுத்த முடியாது. அந்த பிம்பம் 2026 சட்டமன்றத் தேர்தலில் முற்றாகக் கரையும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன், “மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரலாகும். அந்த குரலை அடக்க நினைக்கும் ஆணவ அரசை மக்கள் நிச்சயமாகத் தோற்கடிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.