தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு- யார் யார் பங்கேற்கிறார்கள் !?

Joint Action Committee Against Constituency Restructuring – Who Are the Participants

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக சென்னையில் இன்று 22/03/2025 முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசியலைமப்பு சட்டத்தின் படி 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்திய மாநிலங்கள் பெரிதும் பாதிகப்படும்.இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று அன்மையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கூட்டு குழு அமைக்க கடந்த மார்ச் 05 தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்த்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வருக்கும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுயிருந்தார்.

இதையெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் பவன் கல்யானின் ஜனசேன கட்சி தலைவர்கள் வரை வந்துள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவலையும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

அதன் படி கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் உட்பட்ட 25 பேர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.