
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தனது பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூரை சேர்ந்த ஒரு நபருக்கு, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தன்னை சிஆர்பிஎப் வீரர் என அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் விற்பதாக கூறி குறித்த நபரிடம் பணமோசடி செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த நபர், “நான் டிஐஜி வருண்குமாரின் நண்பன் தான் அவர் உங்கள் எண்ணை எனக்குக் கொடுத்தார்” என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, டிஐஜி வருண்குமார், தனது பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட முயற்சிக்கின்றனர் அதனால் யாரும் இதுபோன்ற சந்தேகத்துக்கிடமான அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.