
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று நடைபெறும் இரண்டாவது கட்ட விழாவில், மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவின்போது, மாணவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க, ஹார்டின் சைகைகள் காட்ட, ரோஜா கொடுத்து கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. இது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்விழாவை ஒட்டி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட கூற்றுகள் கடுமையான விமர்சனங்களை தூண்டியுள்ளன. நடிகரை குறை சொல்லவில்லை என தொடங்கி, “2 கிராம் பரிசுக்காக ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிக்கிறீர்களா?” என அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் வேல்முருகன் பேசியதாவது:-
நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?
பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?
இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?
இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?
எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ? என கேட்டுள்ளார்
தற்போது இவரின் இந்த உரை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது