
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை விளக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பல்வேறு நாடுகளில் உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்டு, ஸ்பெயினில் நடைபெற்ற உரையின்போது “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என உரக்கச் சொன்ன கனிமொழியின் பேச்சு, பார்வையாளர்களிடையே பாராட்டை பெற்றதுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்படும் காணொளியாகவும் மாறியுள்ளது.
இதை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் “தங்கை கனிமொழியைப் பார்த்து பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கான குரலாக, தமிழ்நாட்டின் அன்புமொழியையும் ஒற்றுமையின் மொழியையும் வெளிநாடுகளில் பேசும் அவரது செயல் பாராட்டுக்குரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி அரசியல் தலைவராகும் கனிமொழியின் இந்த வெளிநாட்டு பயணம், அரசியல் மட்டுமல்லாது, நாடுகளிடையே புரிந்துணர்வையும் தோழமை உணர்வையும் வளர்த்தெடுக்க உதவிகரமாக இருக்கிறது என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது