
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் மூதாட்டி சுவாசப்பிரச்சனைக்காக பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்
அவர் சேத்துப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும், கொரோனா தொற்றுடன் அவரது உடலில் இருந்த கேன்சர் மற்றும் நீரழிவு போன்ற நோய்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஐ கடந்துள்ளது
அத்துடன் தமிழகத்தில் மட்டும் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தமிழக அரசு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முககவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர் .