தொகுதி மறுசீரமைப்பு – ஆலோசனை கூட்டத்தை புறகணித்த மம்தா !!

Constituency Restructuring - Mamata Boycotts Consultation Meeting

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக நடைபெறும் கூட்டு குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் பவன் கல்யாண் வரை கலந்து கொள்ளும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

அரசியலைமப்பு சட்டத்தின் படி 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்திய மாநிலங்கள் பெரிதும் பாதிகப்படும்.இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும், என்று அன்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கூட்டு குழு அமைக்க கடந்த மார்ச் 05 தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்த்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வருக்கும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுந்திருந்தார்.

இதையெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பவன் கல்யானின் ஜனசேன கட்சி தலைவர்கள் வரை கலந்து கொள்ள வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.

அம்மாநிலத்தில் ஒரே மாதிரியான அடையாள அட்டை பிரச்னை உள்ளது. இது குறித்து மம்தா பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்து வருகிறது.

இந்த பிரச்னை பீகார், கேரளா, தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மம்தா கருதுகிறார்.

இதனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து உள்ளதாகவும், இதனால் சென்னையில் நடக்கும் கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.