
அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கிய பல தீர்ப்புகள் சர்சையை உண்டாக்கி உள்ளது.. அந்த வகையில் தற்போது சிறுமிக்கு எதிரான வழக்கில்” பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது மற்றும் ஆடைகளை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியை பவன், ஆகாஷ் ஆகிய இருவரும் வழிமறித்து, அவர் மீது தவறாக கைவைத்ததுடன், அவரை பாலத்தின் அடியில் இழுத்து சென்று ஆடையை அவிழ்த்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் தலையிட்டதால் இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 376 (பாலியல் பலாத்காரம்),மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவு18 ( சிறுமியை பலாத்கார முயற்சி செய்தது)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கீழ்நீதிமன்றமான கஸ்காஞ்ச் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை அதை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததது. இதையெடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை, நாங்கள் எந்தவிதமான பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் , என மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி மனோகர் நாராயணன் விசாரித்தார். விசாரணையின் போது கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் உண்மைகளை பார்க்கும் போது, இது பாலியல் வன்கொடுமையோ, அல்லது அதன் முயற்சிக்கான குற்றமாக தெரியவில்லை. இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவேண்டியது அவசியம். பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபடுவதற்கு தயாராவதும், பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த சிறுமியை பாலத்துக்கு கீழே இழுத்து சென்று அவரின் ஆடையை கிழித்துள்ளார், என்பதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகள் கழற்றப்படவில்லை, அவர் நிர்வாமணமாக்கபடவில்லை. ஆதலால் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, மேலும் குற்றம்சாட்டப்படவரும் பாலியல் வன்கொடுமைக்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை.
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பதோ அல்லது ஆடையை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் தாக்குதல் அல்லது அத்துமீறலாக தான் கருத முடியும்.ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குப் பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவு பாலியல் குற்றவாளிகளளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளாது என சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர், இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளார், “உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.