பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதிலளித்துள்ளோம்!

"Statement asserting action taken in response to those who only pretend to support women's safety."

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு, நியாயத்தையும் நேர்மையையும் காட்டி தமிழக காவல்துறை பதிலளித்துள்ளது”என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் லாபம் தேடும் சின்ன புத்திகளை தவிடுபொடியாக்கி, குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத் தந்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் :-  

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! 

விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. 

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகி உள்ளது. 

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன். என தெரிவித்துள்ளார்