மாணவர்கள்  தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம் –  எடப்பாடி பழனிசாமி 

மாணவர்கள் தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம்

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஒழிக்க போவதாக திமுக தலைமையிலான அரசு மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பொய்யாகியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து வேதனையை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இது திமுக அரசு வழங்கிய பொய்யான வாக்குறுதிகளின்  விளைவாகவே ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

   ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்வாரா?. அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என முதல்வர் மு.க. ஸ்டாலினும்,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்.

ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும்,  அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து தம்பியை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.  இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்?. அத்தனையும் நாடகம். திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்.  

மேலும், , ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன.

அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். முயற்சியை ஒருபோதும் கைவிடாதே.   எனவும் கேட்டுக்கொண்டதுடன் மாணவர் கௌதமின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் உள்ளார்.

  அத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் எனவும்  கடுமையாக சாடியுள்ளளார்