புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இலங்கையை சேர்ந்த ஒருவர், 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ‘உபா’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
‘தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
அதன்படி தான், மூன்றாண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை நாட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவர் அந்த மனுவில் ‘விடுதலை புலிகளின் சார்பில் போரில் நான் பங்கேற்றுள்ளேன். மீண்டும் அந்த நாட்டுக்கு சென்றால் கைது, சித்ரவதையை எதிர்கொள்ள நேரிடும்’ என்றும் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் இவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி தத்தா, இங்கேயே தங்கிக்கொள்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
‘இந்தியாவில் வசிப்பதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்’ என்றும் நீதிபதி கூறினார்.” உலகம் முழுவதும் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. நாங்கள் இங்கு 140 கோடி மக்கள் தொகையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இலங்கை நாட்டவரின் வக்கீல் ‘அவரது நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என்று குறிப்பிட்டபோதும் கூட நீதிபதி ‘அப்படியெனில் வேறு நாட்டுக்கு போக வேண்டியது தானே’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், இதுபோன்ற கோரிக்கையுடன் வந்த ரோஹின்கியா அகதிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், நாடு கடத்த உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
அகதிகளை ஏற்றுக்கொள்ள இந்தியா என்ன தர்ம சத்திரமா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி!