நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 

அந்த தேர்வின்போது மின்தடை மற்றும் மழை காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மே 4ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டதால், மையத்தில் வெளிச்சம் குறைவடைந்தது.

மேலும், மழைநீர் மையத்துக்குள் புகுந்ததால் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என தெரிவித்தனர்.  எனவே, அவர்கள் NEET தேர்வுக்கு மறு தேர்வு  நடத்தக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை (NTA), மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றிடம் இந்த விடயம் குறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 

மேலும், மறுதேர்வு கோரிய மனுவின் விசாரணை முடியும் வரை NEET தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிக தடை விதித்து   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.