உதகை மலர் கண்காட்சியை மே 15 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார் 

உதகை மலர் கண்காட்சியை மே 15 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்

நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி, இந்தாண்டும் மே 15, 2025 அன்று நடைபெற உள்ளது. 

இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், கண்காட்சியை நேரில் பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்டு, அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக உதகைக்கு பயணம் மேற்கொண்டார். 

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை முதலமைச்சர் நேரில் சந்திக்க உள்ளார். 

தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பில், பழங்குடியின மக்கள் சந்தித்து அவர்களது பிரச்சனைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களை நேரடியாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அத்துடன் பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதுடன் , முதலமைச்சர் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்குவதோடு, உள்ளூர் வளர்ச்சித் திட்டங்களை மதிப்பாய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனைகள் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.